CSK விசயத்தில் சரியான பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
ஒட்டுமொத்த தமிழநாட்டு கிரிக்கெட் பிரியர்களும் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் தருணம் வந்துவிட்டது. ஆனால் இங்கு இருக்கும் நிலைமையோ வேறு. ஸ்டெர்லைட், காவிரி வாரியம் என பல போராட்டங்கள்.
இந்நேரத்தில் நல்லெண்ணம் கொண்ட சில இளைஞர்களும் ஐ.பி.எல் போட்டிகள் மீது ஆர்வம் காட்டாமல் போராட்டம் பக்கம் திரும்பியுள்ளனர். சில பிரபலங்களும் நமக்கு இப்போதைக்கு விவசாயம் தான் முக்கியம். போட்டியை வீட்டிலிருந்து பார்ப்போம். மைதானத்துக்கு செல்வதை தவிர்ப்போம்.
காலி இடம் உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலக பார்வை நம் போராட்டத்தின் மீது விழும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்காக பலரும் போட்டியை தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், விளையாட்டுக்கு நான் எதிரியல்ல. விவசாயிகள் நீண்ட போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டியை நானும் புறக்கணிக்கிறேன்.
பெரிய புறக்கணிப்பால் சரியான நபர்களை தேடி விசயம் செல்லும். விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்படாமல் தேசிய விளையாட்டை எப்படி கொண்டாட முடியும் என கேள்வி கேட்டுள்ளார்.

Comments
Post a Comment