Posts

மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டோனி: வைரலாகும் வீடியோ

Image
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி வென்ற போது டோனியின் ரியாக்ஷன் குறித்த வீடியோ வைரலா கியுள்ளதுநேற்று மும்பைக்கும், சென்னைக்கும் இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பிராவோ ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்கடைசி நேரத்தின் போது வெற்றியை கொண்டாடிய டோனி, சந்தோஷத்தில் புன்னகைத்தார், முதன்முறையாக டோனியின் இந்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது. எப்போதும் சமநிலையில் இருக்கும் டோனி, நேற்று ஆட்டமிழந்ததும் சோகமானார், அடுத்தடுத்த ஹர்பஜன், ஜடேஜா ஆட்டமிழக்க சோகம் அதிகமானது. கடைசி மூன்று ஓவர்களில் பதட்டமாக இருந்த டோனி, பிராவோ சிக்ஸர் அடிக்கும் போது இவரும் சிக்ஸர் அடிப்பது போன்று கையசைத்துக் கொண்டிருந்தார். வெற்றி பெற்றதும் கைதட்டி புன்னகையுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய டோனி, பிராவோவை கட்டிப்பிடித்தார்இரண்டு ஆண்டுகளுக்கு பின், முதல் போட்டியிலேயே சென்னை அணி வென்றிருப்பது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி

Image
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் தன்னை தமிழர் என்று சொன்னாலும், பலரும் ரஜினியை கர்நாடகாவை சேர்ந்தவர் என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சங்கம் நடத்தும் காவேரிக்கு ஆதரவான மௌன போராட்டத்தில் ரஜினி கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் கலந்துக்கொள்வதற்கு முன் பேசுகையில் ‘பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை, மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது. மேலும், காவேரிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும், ரசிகர்களும் அதை தான் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்இதுமட்டுமின்றி கமல் என்னுடைய எதிரி இல்லை, லட்சம், ஊழல், வறுமை தான் என கூறியுள்ளார்.

சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் - பிரேம்ஜி டிவிட்

Image
இரண்டு வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. ஐ.பி.எல்லில் சிஎஸ்கே வெற்றியை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் மங்காத்தா படத்தில் பிரேம்ஜி அஜித்தை சந்திக்கும்போது சிஎஸ்கே அணி மும்பையில் வெற்றி பெற்றதை யாரும் கொண்டாடலை. நம்ம Celebrate பண்ணலாம் என்று சொல்வார். அதேபோல் இன்றும் மும்பையில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி சரியாக பொருந்துகிறது என்று பிரேம்ஜி தன்னுடைய பக்கத்தில் ரீவிட் செய்துள்ளார்.

இது தான் என் சிறந்த ஆட்டம்: சென்னை அணி வெற்றிக்கு உதவிய பிராவோ குதுகலம் VIDEO

Image
இதற்கு முன்னர் இது போன்ற ஆட்டத்தை எந்தவிதமான போட்டியிலும் நான் வெளிப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை என பிராவோ கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியை பெற்றது. ஒரு கட்டத்தில் சென்னை அணி தோற்றுவிடும் என்ற நிலை இருந்த போது அதிரடி ஆட்டக்காரர் பிராவோ 30 பந்துகளில் குவித்த 68 ஓட்டங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தது. போட்டிக்கு பின்னர் பேசிய பிராவோ, இதற்கு முன்னர் இது போன்ற ஆட்டத்தை எந்தவிதமான போட்டியிலும் நான் வெளிப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே இப்போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்ததாகும். விக்கெட்கள் சரிந்த போதும் நான் இறுதிவரை களத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடிவும் என நம்பினேன்துடுப்பாட்டத்தின் மூலம் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

අපේ මාලියි මහේලගෙයි පලමු කඩඉම දුකක් කරපු සුපිරි ඉනිම මෙන්න අන්තිම ඕවරයේ දුන්න ගේම කොහොමද පිස්සු හැදෙනවා බලන්නකො video

Image
පැවති තරගාවලියේදී පලමු තරගයෙන් තියුනු ජයක් ලබාගැනිමට චෙන්නායි පිල සමත් වුනා එ බ්‍රවෝගේ අගනා ලකුණු 68ත් සමගින් .මෙම ලකුණු 68 ලබා ගත්තේ පන්දු 30ක් තුලදි මෙයට අගනා 6 පහර 7ක් හා 4 පහර 3ක් ඇතුලත්වයි. අගනා ලකුණු 68 ලබා ගැනිමට එල්ල කල 6 පහරවල් ඇතුලත් වීඩියෝව​.වීඩියෝව පහතින් නරඹන්න.ඒ වගේම මිතුරන්ටත් බලන්න ශෙයාර් කරන්න පහළ බැනරය ක්ලික් කර වීඩියෝව බලන්න.

இப்படிப் போட்ட எப்படி அடிக்கிறது? பாண்டேவை மைதானத்தில் கீழே விழ வைத்த பிராவோ video

Image
மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது பாண்டேவை தன்னுடைய யார்க்கர் பந்தின் மூலம் பிராவோ அவரை விழ வைத்ததார். சென்னை-மும்பை அணிகள் மோதிய முதல் போட்டி ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பான இப்போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் டேவைன் பிராவோ சிக்சர் மழை பொழிந்து அணியை வெற்றி பெற வைத்தார். துடுப்பாட்டத்தில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் நேற்று பிராவோ தனிக் காட்டு ராஜாவாக இருந்தார். இவரது கடைசி கட்ட இரண்டு ஓவர்களை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடிக்க முடியாமல் திணறினர். அப்போது ஒரு கட்டத்தில் பிராவோ வீசிய யார்க்கர் பந்தை பாண்டே அடிக்க முற்பட்ட அது எதிர்பாரதவிதமாக அந்த பந்து காலில் பட்டு கீழே விழுந்து புரண்டுள்ளார். அதுமட்டுமின்றி அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஓட்டம் ஓடும் போதும் நிலை தடுமாறி கீழே விழுந்த இவருக்கு சென்னை அணி வீரர்கள்

ஒரே ஓவரில் மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ: பரபரப்பில் முடிந்த முதல் ஐபிஎல் போட்டி video

Image
மும்பை அணிக்கெதிரான போட்டியில் சென்னைஅணி டேவைன் பிராவோவின் அதிரடிஆட்டத்தால் த்ரில் வெற்றிபெற்றதுமும்பை-சென்னை அணிகளுக்கிடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித், லீவிஸ் களமிறங்கினர். லீவிஸ் தீபக் சஹார் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதன் பின் வந்த இஷான் கிஷான் நிதான ஆட்டத்த வெளிப்படுத்தினார். மற்றொரு முனையின் ஆடி வந்த ரோகித் சர்மா 15 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் உடன் இணைந்து ஓட்டத்தை குவிக்க ஆரம்பித்தார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வாட்சன் பந்தில் வெளியேறினார். இஷான் கிஷான் 40 ஓட்டங்களிலும் பெளலியன் திரும்ப மும்பை அணி ஒரு கட்டத்தில் 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள்டத்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டம் குவித்தனர். இறுதியாக மும்பை அணி...